Sunday, February 19, 2017

தமிழக மக்கள் தங்கள் மன உளைச்சலை ஆளுநர் மாளிகைக்கு தெரிவிக்க வேண்டும் என நடிகர் கமல் கூறியிருக்கிறார்.  மேலும் ஆளுநர் மாளிகையின் இமெயில் முகவரியை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல் வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது: “Rajbhavantamilnadu@gmail.com என்ற விலாசத்துக்கு நம் மன உளைச்சலை மின் அஞ்சலா அனுப்புங்க. மரியாதையா பேசணும் அது அசம்பளியில்ல கவர்னர் வீடு என்றும் கமல் கூறியிருக்கிறார்.

மற்றொரு பதிவில்,சட்டசபை நிகழ்வுகளை ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன என்று நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதை விட மோசமான நிகழ்வுகளைத் தமிழகம் கண்டிருக்கிறது என நடிகர் கமலஹாசன் தனது டூவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் இதை கண்டு அதிர்ச்சி அடையத் தேவையில்லை என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரும் நிலையில், முன்னதாக கமல் போட்டுள்ள ட்வீட் இது: "இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்." கமலின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்து இயக்குநர் சீனு ராமசாமி, "இரவில் ரசியமாக  நரிகள் பரியானது சொக்கப்பன் நாட்டில்....பொதுவில் பகலில் உருமாறுமா.. நரிகளுக்கும் வெடகமுண்டு மனசாட்சியுண்டு," என்று கூறியிருந்தார்.

கமல் தமது பதிவில் நம்பிக்கை வாக்களித்துவிட்டு வரும் உங்களது தொகுதி எம் எல் ஏக்களை நன்றாக கவனியுங்கள் என்றும் நாசூக்காக கூறியுள்ளார்.கமலின் ட்வீட்டர் பதிவுகள் இளைஞர்களை கவரும் விதத்திழும், கவனிக்க வைக்கும் விதத்திலும் உள்ளன.

கமலை அடுத்து, அரவிந்த சாமி காட்டமாக கருத்து கூறியுள்ளார்."மக்களுடைய உணர்வுகளை எம்.எல்.ஏக்கள் பிரதிபலிக்கவில்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதற்கு மக்களை அவர்கள் சந்திக்க வேண்டும்இ விடுதியில் கட்சியினரை அல்ல.ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் மட்டுமே காட்டப்படுகின்றன. என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில்
அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று நடிகர் இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் சூர்யா இவ்வாறு கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer