Friday, February 24, 2017

சிரியா நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் உள்ளூர் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க அரசு படை போராடி வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய அலெப்போ மாகாணத்தை சேர்ந்த அல்பாப் பகுதி தீவிரவாதிகளிடம் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்டது. மேலும் சிரியாவில் இருந்து தீவிரவாதிகளை விரட்டியடிக்க துருக்கி படையினரும் விமான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அல்பாப் நகர் அருகேயுள்ள சுசியன் பகுதியில் நேற்று முன்தினம் வெடிகுண்டுகளை நிரப்பிய கார் ஒன்று சென்றது. அப்போது அந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இதனால் பொதுமக்கள் பலர் அலறியடித்து ஓடினர். இந்த தற்கொலை படை தாக்குதலில் அங்கிருந்த போராளிகளின் சோதனை மையம் முற்றிலும் சேதமடைந்தது. 51 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் பலர் போராளிகள் குழுவை சேர்ந்தவர்கள் என தெரிகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer