Sunday, February 19, 2017

சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் கடந்த 9 ஆம் தேதி வெளியான 'சிங்கம் 3' திரைப்படம்.. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை  பெற்றுள்ளது. முந்தைய பாகங்களை போலவே இந்த படமும் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சண்டை கட்சிகள் இருப்பதால் அக் ஷன்  பிரியர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாததால், இந்த படத்தின் வெற்றி சூர்யாவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படம் கடந்த 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தற்போது தகவல் பரவி வருகிறது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ள சூர்யா இயக்குனர் ஹரி ‘சி3’ படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக 25 லட்ச ரூபாய் மதிப்பிலான  டொயோட்டா ஃபார்ச்சுனர் கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். புதிய காரின் முன் சூர்யாவும், ஹரியும் நிற்பது போன்ற புகைப்படம் தற்போது அனைத்து வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer