Sunday, February 19, 2017

முறைகேடாக சொத்துக்குவித்த வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனைவிதிக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் உலகமே பார்க்க மூன்று முறை தரையிலடித்து சபதம் செய்தார்.

கடந்த 15-ந் தேதி அன்று முற்பகல் 11.40-க்கு போயஸ் தோட்டத்திலிருந்து பெங்களூர் சிறைக்குப் புறப்பட்டார். அங்கிருந்து ஜெயா சமாதியில் மலர்தூவிவிட்டு, திடீரென தரையில் அடித்து சத்தியம் செய்தார். தொடர்ந்து மூன்று முறை தரையிலடித்த சசிகலா, கடுங்கோபத்துடனும் லேசான அழுகையுடனும் இருந்தார்.

அவர் என்ன சபதம் செய்தார் என அருகிலிருந்தவர்களிடம் கேட்டதற்கு..

சபதம் 1,

ஜெயிலுக்குப் போனாலும் நான் விரும்பிய ஆட்சியை இங்கே அமைப்பேங்கிறது.

சபதம் 2,

என் முதல்வர் கனவைத் தகர்த்த ஓ.பி.எஸ்.சை, அரசியல்ல தலையெடுக்க விடாம ஆக்குவேன்ங்கிறது.

சபதம் 3,

நான் ஜெயிலுக்குப் போறேன்னு சந்தோசப்படுற எதிரி கட்சிகளோட முகத்தில் கரியைப் பூசுற மாதிரி சீக்கிரமே வெளியே வந்துகாட்டுறேன்கிறதுதான் ” என்று கூறினார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer