Monday, February 20, 2017

சோமாலியா தலைநகர் மொகாடிசுவின் மையத்தில் உள்ள சந்தை ஒன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப் பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 39 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் 50 பேருக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இத்தாக்குதலில் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து சந்தை முழுதும் அழிவடைந்துள்ளது. காயம் அடைந்தவர்களில் பலர் மோசமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். குறித்த சந்தைக்கு அண்மையில் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருந்ததால் அவர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகின்றது.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு போராளிக் குழுவும் பொறுப்பேற்கவில்லை எனினும் சோமாலியாவில் வலிமையுடன் இயங்கி வரும் அல் ஷபாப் போராளிகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது. அண்மையில் தான் சோமாலியாவின் புதிய அதிபராக முகமது அப்துல்லாகி முகமது என்பவர் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer