ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கக் கோரும் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இருவரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான ஆரம்ப ஆய்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆனாலும், குறித்த வழக்கு மீது விசாரணைகளை நடத்த முடியாது என்று சுதந்திரக் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வழக்கு தொடுத்துள்ளவர்களின் விளக்கங்களை மார்ச் 13ஆம் திகதி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Home
»
Sri Lanka
»
சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்கக் கோரும் வழக்கு; மார்ச் 13 விசாரணைக்கு!
Tuesday, February 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment