Monday, January 2, 2017

கடந்த ஆண்டு பிரெசிலில் நடந்த உடல் ஊனமுற்றவர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு... உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று மாபெரும் வரலாற்று சாதனை படைத்தார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர், அவரது 5 வயதில் விபத்து ஒன்றில் காலை இழந்தாலும் விடாமுயற்சியால் பல இன்னல்களை கடந்து இன்று தமிழகமே பெருமை கொள்ளும் நாயகனாக மாறியுள்ளார்.

இவரது சாதனையை உலகமே அறியும் வகையில்... தற்போது  மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையமாக  வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை ஐஸ்வர்யா தனுஷ் சேகரித்துள்ளார். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளதொடு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

மாரியப்பன் வேடத்தில் நடிப்பதற்கு  சரியான நபரை  தற்போது படக்குழு தேர்வு செய்து வரும் நிலையில்... இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டுள்ளார். இதில் படத்தின் போஸ்டருக்காக மாரியப்பன் தங்கவேலுவை வைத்தே போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது என்பது சிறப்பு தகவல்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer