Saturday, January 14, 2017

தமிழகத்தில் இந்தாண்டு கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 1995-ம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளார். ஜல்லிக்கட்டை ஆதரித்து, ‘கொம்பு வச்ச சிங்கமாடா’ என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளார். ‘நெருப்புடா’ அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்தப் பாடல் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer