Saturday, January 14, 2017

அட்டகாசமான ஐ போன் 8 இது தான் என்கிறார்கள். உலகையே ஆட்டிப் படைக்கும் பெரும் கம்பெனிகளில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. ஆனால் அவர்கள் தற்செயலாக இந்த புகைப்படத்தை வெளியே கசிய விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு அனர்த்தம் தான் என்கிறார்கள். சீனாவில் தற்போது தயாராகி வரும் ஆப்பிளின் அடுத்த வெளியீடான ஐபோன் 8 செப்டெம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இன் நிலையில் குறித்த போன் எப்படி இருக்கும் என்பதனை பரம ரகசியமாக ஆப்பிள் நிறுவனம் வைத்திருந்ததாம். ஆனால் சீனாவில் உள்ள கம்பெனி ஒன்று இதன் புகைப்படத்தை தவறுதலாக வெளியே விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆப்பிள் ஐபோன் 8ல் பல தொழில் நுட்ப்பங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் பின் புறம் செயிண்டஸ் ஸ்டீலில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் முன் பக்க தொடு திரை(டச் ஸ்கிரீன்) உடையவே உடையாது என்கிறார்கள். எனவே நீங்கள் தவறுதலாக வீழ்த்தினால் கூட அது உடையாது. இப்படி பல தரப்பட்ட புதிய தொழில் நுட்ப்பத்தோடு சந்தைக்கு வரவுள்ள ஐபோன் 8 வசூலில் மிகப் பெரிய சாதனை செய்யும்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer