Sunday, January 1, 2017

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நாள் நெருங்க நெருங்க சில பிரமுகர்கள் நடிகர் விஷாலை சந்தித்து அவரிடம் ஆசி பெற்று வருகிறார்கள்.

“எங்க தரப்புலேயும் போட்டியிடுவோம்ல?” என்று அவர் பல மாதங்களாகவே குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நேரத்தில் இந்த பிரமுகர்கள் அவரை சந்தித்து கூல் பண்ணுவதற்கு காரணமே, “குறுக்கே வந்திராதீங்க தம்பி” என்பதற்காகதானாம்.

இது புரிந்தோ புரியாமலோ இன்முகம் காட்டி வருகிறார் விஷால்.

பல்லி தலையில விழுமா, இலையிலே விழுமா என்பது இப்போதைக்கு தெரியாது.

போட்டிக்கு மனு செய்ய இன்னும் நாள் இருக்கு பிரமுகர்களே...

0 comments :

Post a Comment

 
Toggle Footer