Saturday, January 14, 2017

ஜனவரி 20 ஆம் திகதி பணியில் இருந்து விடைபெறும் அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடன் பணியாற்றியவரும் பதவியில் இருந்து விடைபெறவுள்ளவருமான துணை அதிபர் ஜோ பிடெனுக்கு அமெரிக்காவின் சுதந்திரத்துக்கான அதிபரின் விருதை வியாழக்கிழமை அளித்துக் கௌரவித்துள்ளார்.

இந்த விருதே அமெரிக்காவின் அதியுயர் சிவிலியன் விருதாகும். மேலும் தான் சந்தித்த தன்னிகரற்ற பதவியில் பொதுமக்கள் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்த தன்னிகரற்ற மனிதர் பிடென் என்றும் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் வியாழன் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கண்ணீருடன் குறித்த விருதைப் பெற்றுக் கொண்டார் பிடென். இதன் பின் பேசிய அவர் தனது பணிக்குத் துணை நின்ற தனது மனைவி மக்களுக்கும் அமெரிக்காவுக்காகத் தம்மை அர்ப்பணித்து சேவையாற்றிய ஒபாமாவின் குடும்பத்தினருக்கும் கூட நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் செயற்கரிய செயல்களைப் புரிந்த அற்புதமான மனிதரான ஒபாமாவின் பயணத்தின் ஒரு பகுதியே எனது அனைத்துப் பணிகளும் என்றும் பிடென் கூறினார். பின்னர் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில் பிடென் தனக்கு மட்டுமல்லாது அமெரிக்க மக்களுக்கும் மிகச்சிறந்த ஒரு தெரிவாகவேத் தென்பட்டுள்ளார் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer