Sunday, January 1, 2017

முடிவுக்கு வந்தது சிக்கல். கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு அகிலேஷ் யாதவ் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது, அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங்கால் வாபஸ் பெறப்பட்டது.

சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் இடைநீக்கம் செய்து முலாயம் சிங் யாதவ் நேற்று நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் முதலமைச்சர் இல்லத்திற்கு வெளியே தனது ஆதரவு கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்களுக்கும், முலாயாம்சிங் யாதவ் மற்றும் சிவ்பால் யாதவ் ஆதரவாளர்களுக்கும், முதலமைச்சர் இல்லத்திற்கு வெளியே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் சிக்கல் முடிவுக்கு வரும் விதமாக அகிலேஷ் யாதவ் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது என்று முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer