Saturday, January 28, 2017

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் பொழுதுபோக்க மெரினா கடற்கரைக்கு வருவதால் நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

மெரீனா கடற்கரையில் மாணவர்களின் எழுச்சி மிகு போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், காவல்துறை, இனி வரும் காலங்களில் மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer