Monday, January 2, 2017

வீர சிவாஜி படத்தின் ரிசல்ட்டை விடுங்கள்... அப்படத்தில் நடித்த ஷாம்லிக்கு ஆடியன்ஸ் தந்த ரெஸ்பான்ஸ், பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.

இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு அவர் கொடுத்த பில்டப்பை இப்போதும் நினைத்து இஞ்ச் டேப்பால் அளக்க முடியாத அகலத்தில் சிரிக்கிறது மீடியா.

அவரிடம் பேட்டி கேட்ட தொலைக்காட்சிகளிடம், ஒரு பேட்டிக்கு ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று அவர் சொன்னதையெல்லாம் திரும்ப சொல்லி திம்சு கட்டை இடிக்கிறார்கள் இங்கே.

அது மட்டுமா? வேறு படங்களில் நடிக்க அழைத்தவர்களிடம், வீர சிவாஜி வரட்டும் என்று சொல்லியே நாட்களை கடத்தி வந்தாராம்.

அந்த நபர்களிடமிருந்து இப்போது மிஸ்டு கால் கூட வரவில்லை ஷாம்லிக்கு. நாகலாந்து பூடான் லாட்டரியடிக்கும்னு நினைச்சா, இப்படி பழைய ஆயிரம் ரூபா நோட்டு லெவலுக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்களே அவரை?

0 comments :

Post a Comment

 
Toggle Footer