Monday, January 16, 2017

ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு மற்றும் பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் இரண்டு இடங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு, கோட்டை, புறக்கோட்டை மற்றும் பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதிகளில் அவ்வப்போது, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், பொதுமக்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இந்த நிலைமையை இல்லாமற் செய்வதற்கே, அரசாங்கம் மேற்கண்டவாறு தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு மற்றும் பாராளுமன்றத்துக்கு அண்மையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவேண்டிய இரண்டு இடங்களை, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னர், சகல எதிர்ப்பு நடவடிக்கைகளும் இவ்விரு இடங்களில் மட்டுமே வரையறை படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer