Sunday, January 1, 2017

கவிஞர் செ.கஜானனின் கவிதை நூல் வெளியீடு செய்யப்பட்டது…

ரியூப்தமிழ் நிறுவனத்தின் வடமராட்சிப் பிரிவு நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது, வடமராட்சியின் பல்வேறு ஊர்களிலும் இருந்து 40 இளைஞர்கள் இணைந்து செயற்படுகிறார்கள்.

ஓர் ஊருக்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில் அனைத்து ஊர்களில் இருந்தும் இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்கான உதவிகளை நல்ல முறையில் நெறிப்படுத்தும் பணிகளையும், தாயகக் கலைஞர்களையும், தொழில்களையும் ஊக்குவிக்க இவர்களின் தொண்டு உள்ளம் பேருதவியாக இருக்கிறது.

ஏற்கெனவே சாவகச்சேரிப்; பிரிவு மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது, அதைத் தொடர்ந்து வடமராட்சிப் பிரிவு அமைக்கப்பட்டது.

இதன் முதலாவது நிகழ்வாக வன்னியில் பசுமாடு வழங்கும் நிகழ்வும், நேற்று பளையில் இளம் கவிஞர் செ.கஜானன் எழுதிய விழிதேடும் புல்லாங்குழல் என்ற கவிதைத் தொகுப்பை முன்னின்று வெளியிட்டு வைத்தலும் நடைபெற்றன.

மங்கள மேளம் முழங்க நூலாசிரியரும், முக்கிய விருந்தினர்களும் பளை நகரை ஊடறுத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர், கோபால் வெளியீட்டகம் வெளியிடும் நூலாக இது அமைந்துள்ளது.

முதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஸ்வரன் வெளியீட்டு விழா மண்டபம் வந்து விரைவாக வாழ்த்தி சென்றார், பிரதமர் காரியாலயத்தின் அவசர அழைப்பு வந்த காரணத்தினால் இளம் கவிஞரை இருந்து வாழ்த்த முடியவில்லை என்றாலும் தனது கருத்தை பதிவு செய்து சென்றார், அவரைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிறப்புரையை வழங்கினார்.

வவுனியா தமிழ்சங்க அமைப்பாளர் தமிழருவி. த . சிவகுமாரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இன்று மட்டுநகரில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு பசுமாடு வழங்கும் நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நாளை தாண்டிக்குளத்தில் ஒரு தம்பதியர்க்கு பசுமாடு வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

நம்பிக்கை இழக்கவில்லை இப்போதும்…

தொடர்கின்றன பணிகள்…








0 comments :

Post a Comment

 
Toggle Footer