Thursday, January 12, 2017

சந்தானத்திற்கும் மாதவனுக்கும் சண்டை சச்சரவு என்றால் நம்ப முடிகிறதா?

வேலிக்கும் ஓணானுக்கும் இருக்கிற உறவு கூட, சந்தானத்திற்கும் மாதவனுக்கும் இல்லை.

அப்புறம் ஏன்? விஷயம் இதுதான். சந்தானமும் காட்டுப்புலி ஒன்றும் ஒரே இடத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

புலியிடமிருந்து சந்தானம் எப்படி தப்பினார் என்பதுதான் கதை.

இப்படி ஒரு படம் தயாராகி வருகிறது தமிழில். லைப் ஆப் பை என்ற படம் போலிருக்கிறதல்லவா? யெஸ்... அதேதான்.

இது சற்றே மாறுதல் செய்யப்பட்ட உல்டா. அதே போலொரு கதையைதான் படமாக்கப் போகிறார் களவாணி சற்குணம்.

ஹீரோ மாதவன். இந்த விஷயம் தெரிந்த மாதவன், சந்தானத்தை தொடர்பு கொண்டு நாங்க இப்படியொரு படம் எடுக்கிறோம்.

நீங்க உங்க கதையை மாத்திக்கோங்க என்று சொல்ல... நீங்களும் காப்பி. நாங்களும் காப்பி.

இதுல யாரு யாருக்கு உத்தரவு போடுறது என்றாராம். படத்துல உறும வேண்டிய புலி, இப்போது திரைக்குப்பின்னால் உறுமிக் கொண்டிருக்கிறது.

ஒரிஜனல் ஹாலிவுட் புலிக்கு இந்த விஷயம் தெரியாது என்பதுதான் சொரேர்....

0 comments :

Post a Comment

 
Toggle Footer