Friday, January 13, 2017

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு செல்ல முயன்ற நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இராமேஸ்வரம் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது போது தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்பகுதியில் வைத்து குறித்த நபரை தனுஷ்கோடி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இவர் இலங்கையிலிருந்து செல்வதற்கு காரணம் என்ன? எதும் அமைப்பில் உள்ளவரா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer