Sunday, January 1, 2017

தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டு தன்னை தனி ஒருவனாக அடையாள படுத்திக்கொண்ட நடிகர் அரவிந்த் சாமி, தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து "போகன்".. த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்து "சதுரங்க வேட்டை 2" என படு பிஸியாக நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல்.. இயக்குனர் செல்வா இயக்கத்தில் "பாஸ்கர் தி ராஸ்கல்" படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் "வணங்காமுடி" படத்திலும் இவர் தான் ஹீரோ.

தற்போது மேலும் ஒரு தகவலாக, தமிழ் திரையுலகில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்கத்திலும் இவர் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது நடிகர் அரவிந்தசாமி  உறுதிப்படுத்தும் விதமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இது உறுதியானால் பாலா இயக்க உள்ள  "குற்றப்பரம்பரை" படத்தில் தான் இவர் நடிக்க உள்ளார் என்பதோடு, இந்த பட விவகாரத்தில் தான் இயக்குனர் பாலாவிற்கும், பாரதிராஜாவிற்கும் இடையே முட்டல், மோதல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer