Saturday, January 14, 2017

காஞ்சிபுரம் மாவட்டம், காயலில் தேமுதிக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

அப்போது பேசிய விஜயகாந்த், நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது மனைவியும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆகையால்தான் நான் உழவன் மகன் படத்தில் நடத்தேன். நான் 100 வயது வரை வாழ்வேன். என் மனைவி இருக்கும் வரை எந்த வியாதியும் என்னை அண்டாது. அண்டவும் முடியாது. 100 வயதில் ஒரு நாளாவது நான் தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஏதாவது நல்லது பண்ணிட்டுத்தான் என் கட்டை போகும். அதுதான் உண்மை. இவ்வாறு கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer