Wednesday, January 11, 2017

நடிகர் சிம்பு சென்னை தியாகராயர்நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எனது தந்தைதான் எனக்கு தமிழை ஊட்டி வளர்த்தார். தமிழ்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நமது தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ் மொழிதான் எனக்கு வாழ்வளித்தது. தமிழகத்தில் தமிழர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் உள்ளது. அத்தனை பிரச்சனைகளுக்கும் போராடுகிறார்கள். தீர்வு கிடைக்கவில்லை. எதையும் பொறுத்துக்கொள்வதே தமிழர்களின் பலமும், பலவீனமும். தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதே பிரச்சனையாகிவிட்டது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டில் கைவைக்கிறார்கள். ஏனென்று கேட்டால் பொங்கல் விடுமுறையே கிடையாது என்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி நாளை மாலை 5 மணிக்கு எனது வீட்டுக்கு அருகே மவுன போராட்டம் நடக்க உள்ளது என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer