Wednesday, January 4, 2017

அப்பல்லோவில் ஜெ. இருந்தபோது நலன் விசாரிக்கச் சென்ற முதல் அரசியல் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற தும்  போயஸ் கார்டனில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்த முதல் தலைவரும் திருமாதான். வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமாரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. டி.டி.வி. தினகரனும் உடனிருக்க 25 நிமிடங்கள் நீடித்தது இந்தச் சந்திப்பு.

"மரியாதை நிமித்தம்' என வெளியில் சொல்லப்படும் இச் சந்திப்பு குறித்து ரவிக் குமாரிடம் நாம் பேசியபோது, ""கார்டனில் ஜெ. படத்துக்கு அஞ்சலி செலுத்தியபின், சசிகலாவை சந்தித்தோம். சோகம் மாறாத மனநிலையில் இருந்தபோதும், கைக்கூப்பி எங்களை வரவேற்றார். அப்போது எங்கள் தலைவர் திருமா, ""நீங்கள் பேசிய உரை ரொம்பவும் உருக்கமாக இருந்தது. சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்றப்பட்ட வழி யில்தான் அ.தி.மு.க. தொடர்ந்து பயணிக்கும் என நீங்கள் பேசியது மகிழ்ச்சிக்குரிய விசயம்''னு சொன்னார்.

அப்போ அவர், "அக்காவோடு (ஜெயலலிதா) 33 வருஷம் இருந்திருக்கிறேன். அவர் சாதி, சமய வேறுபாடு பார்த்ததில்லை. அதே மாதிரிதான் நானும் இருக்கேன். எங்களது குடும்பம் சாதி, மதத்தை பார்த்ததில்லை. கம்யூனிச தலைவர் மணலி கந்தசாமியை கண்டதும் சுட போலீஸ் உத்தரவிட்டிருந்தபோது அவருக்கு அடைக் கலம் கொடுத்ததற்காக, எங்க மாமாவை சிறையில் அடைத்தார்கள்'' என பழைய சம்பவத்தைச் சொன்னார் சசிகலா என்று விவரித்தார் ரவிக்குமார்.

"அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்காகத்தான் இந்தச் சந்திப்பு' என்கிறார்களே என்றபோது, ""சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளுடன் மக்கள் நல கூட்டியக்கத்தை கட்டியமைத்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள். சசிகலாவை சந்திக்கச் செல்வதற்கு முன்பு சி.பி.ஐ., சி.பி.எம். தலைவர் களிடம் சொன்னபோது, "தாராளமாக சந்தியுங் கள். அதனால் கொள்கை முரண்பாடு வந்து விடாது' என்றனர். அதனால் கூட்டணிக்கான சந்திப்புன்னு நீங்கள் எடுத்துக்கொண்டால் நாங்கள் பொறுப்பாக முடியாது. அதேசமயம், தேர்தல் அறிவிக்கப்படும்போது அப்போதைய சூழல் கருதி மக்கள் நல கூட்டியக்கம் ஒத்தசிந்தனையுடன்தான் முடிவெடுக்கும்'' என்றார் மிக அழுத்தமாக ரவிக்குமார்.

தி.மு.க.வுடனான கூட்டணிக்கு உறுதி யான நம்பிக்கை அறிவாலயத் தரப்பிலிருந்து  இல்லாத நிலையில் சசிகலாவுடனான சந்திப்பை நம்பிக்கையாக பார்க்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள்.

nakkheeran.in

0 comments :

Post a Comment

 
Toggle Footer