Monday, January 2, 2017

டெல்டா பகுதியை பாலைவனம் ஆக்குவதும் பின்னர் எரிவாயு எடுப்பதுமே அரசின் திட்டம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது. தாமதமின்றி விவசாயிகளை காக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. 3 மாதங்களில் தண்ணீர் இன்றி பயிர் கருகியதால் 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

பயிர் பாதிப்பால் உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக விவசாயிகள் பிரச்சனை குறித்து பாஜக சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக ஒன்றரை மாதங்களில் 80 விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம். இதன் பின்னணி பற்றிய சிந்திக்க வேண்டிய ஒரு கோணம். இன்றைய டெல்டா விவசாயிகளின் கொடூர கொலை களுக்கும், மத்திய மாநில அரசுகளின் முரட்டு மௌனத்திற்க்கும் பின்னே மீத்தேன்/எரிவாயு அரக்கன் இருக்கிறான்.

டெல்டா பகுதிக்கு, திட்டமிட்டு நீர்வரத்து தடுக்கப்படுகிறது, விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் அழிக்கப்படுகிறான்.டெல்டா பகுதியை பாலைவனம்  ஆக்குவதும் பின்னர் எரிவாயு எடுப்பதுமே அரசின் திட்டம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer