Sunday, January 1, 2017

ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர், ‘’ம.தி.மு.க பொதுக்குழு கூட்டம் வருகிற பிப்ரவரி 26-ந் தேதி நடக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். அது பற்றி இனி எதுவும் சொல்வதற்கு இல்லை.

தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. எனவே அந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்போம். ம.தி.மு.க மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வேதனை அளிக்கிறது. அப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்து இருக்க கூடாது. இது அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே என்கிறார்கள். அவர் ஒரு பெண்மணி. அதிலும் அரசியல் அரங்கில் தலைவர்களால் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி இருக்கலாம்’’என்று தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer