Monday, January 2, 2017

அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித், 'மெட்ராஸ்' படத்தின் மூலம் தன்னை சிறந்த இயக்குனராக அடையாளப்படுத்திக் கொண்டார்... பின்னர்  ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை  இயக்கி இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்த இவர். 2.0 படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியை வைத்து  படம் இயக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் 'நீலம் புரொடக்‌ஷன்' என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இந்த பட நிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’என்ற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த மாரி செல்வராஜ் இயக்குக்கிறார்.

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து கதை களம் உருவாக்கபட்டுள்ளது. இதில் ‘கிருமி’படத்தில் நடித்த கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்க உள்ளதோடு, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசைஅமைக்கிறார். ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer