Wednesday, January 11, 2017

ரகுமான் நடிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த 'துருவங்கள் பதினாறு' திரைப்படம் தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வெளிவந்ததோடு... ரகுமான், டெல்லி கணேஷ் தவிர இதில் நடித்த அனைவருமே புது முகங்கள் என்ற போதிலும் கதையும், திரைக்கதையும் பலமாக இருந்தால் எந்த ஒரு படமும் வெற்றி பெற முடியும் என்பதை மீண்டும்  நிருபித்துள்ள படம் இந்த 'துருவங்கள் பதினாறு'. இப்படத்தின் இயக்குனருக்கு வெறும் 21 வயதே என்ற போதிலும் தனது அனுபவம் வாய்ந்த இயக்கத்தை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்று... இன்றைய அறிமுக இயக்குனர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரகுமான் மீண்டும் ஒரு கிரைம் த்ரில்லர் ஸ்டோரியில் நடித்து வருகிறார். ’பகடி ஆட்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரகுமான் போலீஸ் அதிகாரியாக  துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்றைய கால கட்டத்தில் சமூக வலை தளங்கள் ஒரு தவிர்க்க முடியாத பொருளாக மாறிவிட்ட போதிலும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளையே மையமாக வைத்து  கதை களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளிவர உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer