Sunday, January 15, 2017

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் சுப்ரமணி சுவாமிக்கு ஆதரவாக பேசிய தமிழக பாஜக பிரமுகருக்கும். ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும் எனக் கூறிய அதிமுக பிரமுகருக்கும் மன்சுர் அலி கான் அவர்கள் பதிலடி கொடுக்கும் காணொளி ஒன்று தற்போது பரவி வருகின்றது.

பாஜக பிரமுகர் பேசுகையி்ல். சுப்ரமணிய சுவாமி கேசுவலாக சொன்னார் அவர் ஒரு பச்சை தமிழர் தான் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா என கேட்க. அதற்கு மன்சுர் அலிகான் பதிலடி கொடுகின்றார். மேலும் ஜல்லிக்கட்டிற்காக போராடும் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக போராடும் இளைஞர்கள் எல்லாம் திமுக வின் தூண்டுதலால் தான் போராடுகின்றார்கள் என்ற கருத்தில் பேச மன்சுர் அலிகான் அதற்கும் பதிலடி கொடுக்கின்றார்.

கட்சி பதவிகளுக்காக தமிழர்களை இழிவு படுத்தும் செயலுக்கு முட்டுக் கொடுக்கும் விதமாக தமிழக அரசியல் வாதிகள் பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது. மன்சுர் அலி கான் அவர்கள் ஒட்டு மொத்த தமிழர்களை உணர்வை அந்த இடத்தில் பிரதிபலித்துள்ளார் என சமூக வலைதளத்தில் மன்சுர் அலிகானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer