Monday, January 16, 2017

திரு­கோ­ண­மலை வெருகல் பிர­தேச செய­லாளர் பிரிவில் பள்ளித் தோழி­க­ளுடன் செல்பி எடுக்க முயற்­சித்த வாழைத் தோட்­டத்தைச் சேர்ந்த பல்­க­லைக்­க­ழக மாணவி ஒருவர் கடலில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார். கடலில் தவறி வீழ்ந்த தனது நண்­பியைக் காப்­பாற்றச் சென்றபோதே இவர் கடலில் மூழ்­கி­யுள்ளார். நேற்று முன்­தினம் பொங்­க­லன்று மாலை 3.00 மணி­ய­ளவில் இடம்­பெற்ற இச்­ சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­தவர் வெருகல் பிர­தேச செய­லாளர் பிரிவின் வாழைத்­தோட்ட கிரா­மத்தைச் சேர்ந்த செல்­வ­சிங்கம் பிர­தீபா (21) என்ற மாணவி என பொலிஸார் தெரி­வித்­தனர்.

செல்பி எடுத்தபோது கடலில் வீழ்ந்த தோழியைக் காப்­பாற்ற குதித்த போதே சம்­பவம் வாழைத்­தோட்­டத்­துக்கு அருகில் உள்ள புன்­னை­யடி கிரா­மத்தின் கடற்­பி­ர­தே­சத்தில் மலைக்­குன்றில் நின்று தனது இரு தோழி­க­ளுடன் செல்பி எடுக்க முற்­பட்­ட­போது இவ­ரது நண்பி கால் தவறி கடலில் வீழ்ந்­துள்ளார். அவரைக் காப்­பாற்­று­வ­தற்­காக இவர் உட­ன­டி­யாக கடலில் குதித்­துள்ளார்.

கடலில் வீழ்ந்த இரு­வ­ரையும் மீட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்தபோதும், தோழியைக் காப்­பாற்ற கடலில் பாய்ந்த பிர­தீபா உயி­ரி­ழந்­துள்ளார். அவ­ரது தோழி தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

சடலம் கைய­ளிப்பு

பிரேதம் பரி­சோ­த­னைக்­காக திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லை க்கு கொண்டு செல்­லப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்ற பின்னர் உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது. கலைப் பிரிவில் 3 ஏ சித்­திகள் பெற்­றவர், 19 ஆம் திகதி பல்­கலை நுழை­ய­வி­ருந்தார் தனது க.பொ.த உயர்­த­ரத்தை வாழைச்­சேனை கறு­வாக்­கேணி விக்­னேஸ்­வ­ராவில் கற்ற இம்­ மா­ணவி 2015 பரீட்­சையில் கலைப்­பி­ரிவில் மூன்று ஏ சித்­தி­க­ளைப்­பெற்­ற­தா­கவும் கிழக்கு பல்­க­லைக்­க­ழத்­துக்கு தெரி­வான இவர் எதிர்வரும் 19 ஆம் திகதி பல்­க­லைக்­க­ழகம் செல்ல இருந்தார் எனவும் பாட­சாலை அதிபர் க.சொக்­க­லிங்கம் தெரி­வித்தார்.

சிறந்த விளை­யாட்டு வீராங்­கனை

குறித்த மாண­வியின் குடும்­பத்­தினர் மீனவ தொழில் செய்து வரு­கின்­றனர். இம்­ மா­ணவி ஆரம்பக் கல்­வியை வாழைத்­தோட்டப் பாட­சாலையில் கற்­று­வந்த நிலையில் க.பொ.த சாதா­ரண தரத்தில் கல்வி கற்க எமது துவா­ரக வித்­தி­யா­ல­யத்தில் சேர்ந்து கல்வி கற்றார். இவர் சிறந்த விளை­யாட்டு வீராங்­க­னை­யாக திகழ்ந்து அகில இலங்கை ரீதியில் ஓட்­டங்­களில் சாத­னை ப­டைத்த திற­மை­சா­லி­யாவார் என்றார்.

இந்­நி­லையில் சிறந்த பெறு­பேற்றை க.பொ.த சாதா­ரண தரத்தில் பெற்ற இவர் வாழைச்­சேனை சென்று கறு­வாக்­கேணி விக்­னேஸ்­வ­ரா வில் க.பொ.தரத்தில் கற்று சிறந்த பெறுபேற்றை பெற்றநிலையில் பல்கலைக்கழத்துக்கு நுழைவதற்கான சகல ஏற்பாட்டையும் பூர்த்தி செய்திருந்தார். எதிர்வரும் 19 ஆம்திகதி பல்கலைக்கழகம் செல்ல விருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer