Saturday, January 14, 2017

விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல், பாடலாசியர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ரஜினி, ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரம். கலாச்சாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள். பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள், ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றார்.

வைரமுத்து பேசும்போது, 'யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டைப் பற்றி கருத்து கூறிவிடலாம், ஆனால் 'முரட்டுக்காளை' அதைப் பற்றி கருத்து கூறியதுதான் சிறப்பு' என நெகிழ்ந்தார்.

கமல் பேசும்போது, 'மக்களுக்காகத்தான் சட்டம். மக்களுக்காக ஒரு சட்டம் திருத்தப்பட வேண்டும்' என்றார்.

முரட்டுக்காளை படத்தில் நடித்த ரஜினி, ஜல்லிகட்டில் காளையை அடக்கி, தமிழகம் முழுவதும் அந்த போட்டிக்கு கவுரவம் சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை மனதில் வைத்துத்தான் வைரமுத்து பேசியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer