Sunday, January 1, 2017

நேற்று வழங்கப்பட்ட பசுமாடு புத்தம் புது நம்பிக்கை..

போரினால் பாதிக்கப்பட்டு, எதிர்காலம் அழிக்கப்பட்டு, உடல் உறுப்புக்கள் இழந்த நிலையில் வாழ்வு தேடி போராடும் போராளிகளுக்கு பசு மாடுகளை வழங்கி தொழில்களை ஊக்குவிக்கும் கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பினர் நேற்று வன்னியில் போராளி ஒருவருக்கு பசுமாடு ஒன்றை வழங்கினார்கள்.

இந்த ஆண்டு முடிவதற்குள் நாளுக்கு ஒரு பசுமாடு என்ற அடிப்படையில் உதவிகள் வேக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

நேற்று புலம் பொழுதில் தாயகத்தில் முல்லைத்தீவில் பொன்னர் முள்ளியவளை என்ற இடத்தில் வாழும் சந்திரலிங்கம் விஜயபாஸ்கர் ( குமணன் ) என்ற முன்னாள் கடற்புலி போராளிக்கு பசுமாடு ஒன்று வாழ்வாதார உதவியாக வழங்கினார்கள்.

அது மட்டுமா.. இந்த மாட்டை பராமரித்து பயன் பெறுவதற்கு வசதியாக பத்தாயிரம் ரூபா ரொக்கப்பணமும் கூடவே வழங்கப்பட்டது.

நேரடியாக களத்திற்கு சென்று அவர்களுக்கான உதவிகளை வழங்கினார்கள் தாயகத்தில் நின்று பணியாற்றும் ரியூப் தமிழ் இளைஞர்கள்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கும் வாழ்வாதார உதவிகள் வருடத்தின் இறுதிப்பகுதியில் கனவேகம் பெற்றுள்ளன.

வழங்கப்பட்ட கால எல்லைக்குள் புலம் பெயர் மக்களின் உதவிகள் ஒரு சதம் கூட விரயமாகாமல், ஊழல் இடம் பெறாமல், துல்லியமான கணக்குளுடன், உதவிகளை தொடர்ந்து கண்காணிக்கும் ஏற்பாடுகளுடன், சரியானவர்களை உதவிகள் சென்றடையும் விதமாக தாயகத்தில் நின்று பணியாற்றுகிறது ரியூப்தமிழ் இளையோர் அணி.

இந்த வருட முடிவிற்குள் வன்னி, மட்டக்களப்பு, தாண்டிக்குளம் ஆகிய இடங்களில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் பணிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பும் ரியூப்தமிழும்.

போரினால் பாதிக்கப்பட்டு கால் ஒன்றை இழந்து, சிறையில் வாடி வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு போராடும் இந்த இளைஞருக்கு வழங்கப்படும் பசுமாடு அவருடைய அன்றாட வாழ்வின் தேவைக்கு பெரும் உதவியாக அமையும் என்பதை சொல்லவேண்டிய தேவை இல்லை.

தினசரி 20 லீட்டர் அளவில் பால் தரும் இந்த மாடு அவருக்கு கிடைத்த புதிய நம்பிக்கை.. தற்போது பசு மாடு ஒன்றின் விலை 150.000 ருபாவரை செல்கிறது.

இதுபோல நாளை மட்டுநகரில் இருவருக்கும் நாளை மறுதினம் தாண்டிக்குளத்தில் பெண் பேராளி ஒருவருக்கும் இதே பசுமாடு வழங்கும் உதவி தொடர இருக்கின்றன..

இதுபோல சென்ற வாரம் போராளி ஒருவருக்கு வளர்ப்பு மீன்களும், கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டன, இன்னொரு போராளிக்கு முச்சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

புது வருடம் பிறக்கும் போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வசதியாக ரியூப்தமிழ் இளைஞர்கள் இரவு பகலாக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவா இல்லை.. இருந்து பாருங்கள் இன்னும் தொடர்கிறது..

இது நம்மக்கள் கண்களில் வடியும் நீரைத்துடைக்கும் ஊழலற்ற உண்மைப் போர்..

ஏழ்மையை வெல்ல முன்னொடுக்கப்பட்டுள்ள தூய பணி..

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம். www.tubetamil.com








0 comments :

Post a Comment

 
Toggle Footer