Tuesday, January 3, 2017

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகை சோலி பெர்ரி  இணையத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெர்ரியின் பாட்டி உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார். இதனையடுத்து புத்தாண்டு அன்று பெர்ரி தனது பாட்டியுடன் இருக்கும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு துக்கம் தெரிவித்தார்.

அந்த புகைப்படத்தில் மருத்துவமனையில் அவரது பாட்டி மரணப்படுக்கையில் இருக்கிறார். அப்போது அவர் அந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கடும் கண்டங்களை தெரிவித்தனர். ரசிகர்களின் தொடர் எதிர்ப்பினால் பெர்ரி  அந்த புகைப்படத்தை அழித்து விட்டார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer