Friday, January 6, 2017

முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீடு தி.நகரில் உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற சசிகலாவின் தலைமை ஏற்க மறுக்கும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பார்வை தீபாவின் பக்கம் திரும்பியுள்ளது.

அதிமுக தொண்டர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டில் குவிந்து வருகிறார்கள். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் வைத்து வருகிறார்கள். 

இரட்டை விரல்களை காட்டி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் தீபா.

தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் இன்று தீபா வீட்டுக்கு வந்திருந்தனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer