Thursday, December 29, 2016

எழுந்தவுடன் முகநூல் என்ற ஓர் அடிப்படைத் தேவை இப்போதைய அன்றாட வாழ்வில் நாகரீகமாகப் போய் விட்டது. இதற்கு எவரும் மாற்றுக்கருத்து கூறமாட்டார்கள்.

ஒரு வகையில் இது நாகரீகம் என்றாலும் உலகம் கிராமமாக மாற இதுவும் ஓர் காரணம் தான். இத்தகைய முகநூலை ஆராயும் போது சற்று வித்தியாசமான பார்வை, எண்ணம் தோன்றியது.

முகநூல் மட்டுமல்ல அனைத்து சமூக வலைத்தளங்களும் பின்பற்றுவது தமிழர் பண்பாட்டைதான். புதிதாக ஏதோ கற்பனைப் புரளி என்ற எண்ணம் வேண்டாம். ஒரு மாற்று வகை சிந்தனை மட்டுமே.

வழமையாக நாம் சமூக வலைத்தளங்களில் செய்யும் செயற்பாடுகள் தமிழர் பண்பாட்டோடு ஒத்துப் போகின்றது.

ஒருவரின் மகிழ்ச்சியினை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள அல்லது கருத்துகளை பகிர்ந்து கொள்ள share என்ற ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று காலம் காலமாய் தமிழர் கடைப்பிடித்து வந்தது தான் மொய் வைக்கும் முறை அல்லது பண்பாடு அதற்கு ஒத்துப்போகின்றது தானே இந்த லைக்.

வீட்டு விஷேடங்களை மாறி மாறி பகிர்ந்து கொள்வதோடு அதற்கு எத்தனை மொய் அதான் லைக் தேடுவது தமிழர் மட்டுமல்ல அனைவரிடமும் சென்று சேருகின்றது.

தமிழர்கள் காலம் காலமாக செய்து கொண்டு வருவது மொய் இந்த தமிழர் பாரம்பரிய முறையை பின்பற்றி "லைக்" செய்யும் முறையை அறிமுக படுத்தியுள்ளார்கள்.

அடுத்து வெட்டி அரட்டை பேசுவது முக்கிய பண்பு அந்த அரட்டைகளினால் பல படைப்புகள் உருவாக ஏதுவாக அமைந்து போயுள்ளது. விவாத முறை அரட்டை தமிழருக்கு சிறப்பு இந்த தமிழரின் அரட்டையை தான் கமன்ட் சாட் comment - chat என மாற்றி உருவாக்கிவிட்டார்கள் போல.

மேலும் இருப்பவனைத் தூண்டி விட்டு போருக்கு அழைத்தலும் தனக்கு வேண்டாதவர்களை வழுக்கட்டாயமாக வம்பு இழுப்பதும் திராவிட சிறப்பு தான் அதற்கும் உண்டு அதுவே poke பட்டன்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பட்டிமன்றம் போட வேண்டுமா இருக்கின்றது குரூப் group. தற்பெருமை பேச தனித் திறமையை வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும் அதன் மூலமே தமிழர் பெருமை இன்று பேசப்படுகின்றது அதற்காக தான் பிரோபய்ல் profile போல.

எட்டாக் Add tag என்ற வசதி கூட ஒரு வகையில் ஒருவருக்கு ஒருவர் கோர்த்து விடும் செயல் போலத்தான்.

தமிழரின் வைராக்கியம் திமிர் கோபம் இது அனைத்தையும் ஒட்டு மொத்தமாக காட்ட அதுவும் நேரடியாக காட்ட, நண்பனா இருந்தாலும் எனக்கு பிடிக்கா விட்டால் தேவையில்லை என்று கூறவே Unfriend மற்றும் Block this person.

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை அடிப்படையாக கொண்டே நாகரீகமாகிப்போன முகநூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவதா வேண்டாமா. எங்கெல்லாம் தமிழ் பாரம்பரியம் தெரிகின்றது.

அந்த தமிழரின் பாண்பாட்டையே இப்போது முழு உலகும் கொண்டாடி வருகின்றது அத்தோடு அத்திய அவசியமாகிப் போய் விட்டது என்றும் கூறலாம். நாம் பார்க்கும் இடம் எல்லாம் தமிழ் தெரியும் என்பதும் இதன் மூலம் தெளிவு.

0 comments :

Post a Comment

 
Toggle Footer