Tuesday, December 27, 2016

TU- 154 என்ற ராணுவ குறியீடு கொண்ட ரஷ்ய விமானம் நேற்று முன் தினம் கருங்கடலில் வீழ்ந்தது. 84 பயணிகள் 8 பணியாளர்கள் என மொத்தமாக 92 பேரும் இதில் மாண்டு போனார்கள். ரஷ்யாவின் எல்லைப் புற நகரமான சோட்ஷி என்னும் இடத்தில் இருந்து குறித்த விமானம், மிக முக்கியமான ராணுவ தளபதிகளை ஏற்றிக்கொண்டு சிரியா நோக்கி பறந்தது. அதிகாலை சுமார் 2.25க்கு குறித்த விமானம் பறப்பில் ஈடு பட பல காரணங்கள் உள்ளது. பொதுவாக எதிரிகள் சற்று ஓய்வெடுக்கும் நேரம் என்பது போக அன்றைய தினம் அந்த வேளையில் மிகவும் ஏதுவான கால நிலை இருந்தது.

எனவே இந்த விமானம் எந்த ஒரு கால நிலை பாதிப்பிலும் சிக்கவில்லை என்பது உறுதி. விமானம் புறப்பட்டு சரியாக 2 நிமிடத்தில் காணமல் போயுள்ளது. அது அருகில் உள்ள கருங்கடலில் வீழ்ந்துள்ளது என்பது உறுதியாகியுள்ள நிலையில். சுமார் 3,000 ராணுவ வீரர்கள் அங்கே குவிக்கப்பட்டும். கடல்படை கப்பல்களும் அங்கே சென்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை ரஷ்யா முடிக்கிவிட்டுள்ளது. இந்த விமானம் வீழ்ந்தது ரஷ்யாவையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் கூறுகிறார்கள். ஏன் எனில் இதில் பயணித்த ராணுவ தளபதிகள், சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய மற்றும் சிரிய  ராணுவத்திற்கு ஸ்பெஷல் பயிற்சிகளை கொடுக்கவே சென்றுள்ளார்கள்.

விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்திருப்பார். அத்தோடு கடலில் விமானத்தை இறக்கியிருக்கவும் முடியும். ஆனால் திடீரென விமானம் எப்படி விழுந்து நொருங்கும் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ள நிலையில். இதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகளே காரணம் என்கிறார்கள். ரஷ்யாவின் ஒரு முடிவில் உள்ள கிராமமான சோட்ஷியில், பாரிய விமான தளம் ஒன்று உள்ளது. இருப்பினும் இது ராணுவ விமான தளம் அல்ல. அங்கே வேலை பார்பவர்களை ஏதாவது ஒருவகையில் கையில் போட்டு. குறித்த விமானத்தினுள் வெடிகுண்டை ஐ.எஸ் தீவிரவாதிகள் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ருயிட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. அதாவது குறித்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் அனைவரையும் வீட்டு காவலில் வைக்க புட்டின் உத்தரவிட்டுள்ளார் என்பது தான்.

சிரியாவின் எல்லைப் புறங்கள் சிலவற்றை தம் வசம் வைத்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒரு காலகட்டத்தில் தமக்கும் தலையிடி தரலாம் என்று எண்ணிய ரஷ்ய. அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் ஐ.எஸ் இயக்கம் இவாறு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அப்படி அவர்கள் இதனை செய்திருந்தால் ஏன் இதுவரை இதனை ஒப்புக்கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இதனை தாமே செய்தோம் என்று ஐ.எஸ் இயக்கம் கூறினால். மறு கணமே ரஷ்யா 10 மடங்கு அதிக தாக்குதலை நடத்தும். எனவே ஐ.எஸ் அமுக்கி வாசிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.



0 comments :

Post a Comment

 
Toggle Footer