Friday, December 30, 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தினை தோற்கடிக்கும் சதித்திட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஐ.தே.க தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, கவிந்த ஜயவர்த்தன மற்றும் ஹெக்டர் அப்புகாமி ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர்கள் கூறியுள்ளதாவது, ”தற்போது சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரும் நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வருவதற்கு உதவி செய்யாதவர்கள். தற்பொழுது அரசாங்கத்தில் பிரச்சினையொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். ஜனாதிபதிக்கு நாங்கள் வழங்கும் ஆதரவு நிறுத்தப்படாது. நாட்டைப் பாதுகாப்பதற்கு நாம் அவருடன் இணைந்திருப்போம். அதனை செய்வதற்கான தார்மீக கடமை எமக்கு உள்ளது. உள்ளகப் பிரச்சினையை வைத்துக் கொண்டே சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மக்கள் மத்தியில் செல்கின்றனர். எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.” என்றுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer