Wednesday, December 28, 2016

வெட்ட வெளியில் வெள்ளை வேஷ்டிய காயப் போட்டால், எந்த காக்காய்தான் எட்ட நின்று எச்சம் போகுமாம்?

கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் அரசல் புரசலாக எழுதப்பட்டு விஷயம், சில தினங்களுக்கு முன் பூதாகரமாகிவிட்டது.

ரஜினிக்கு சொந்தமான ‘தி ஆஸ்ரம்’ பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது சம்பள பாக்கியை வைத்துவிடுகிறதாம் நிர்வாகம்.

இந்த விஷயத்தை அமுக்கி பாதுகாத்து, அறைக்குள்ளேயே சால்வ் பண்ண வேண்டியவர்கள் அதை செய்யாமல் விட்டதால், வெட்ட வெளியில் பற்றிக் கொண்டது.

ஆசிரியர்கள் சிலர் பள்ளி வாயிலின் முன் நின்று போராட்டம் நடத்துகிற அளவுக்கு போய் விட்டது நிலைமை.

எல்லா ஊடகங்களிலும் செய்தி வர... செய்வதறியாமல் நிற்கிறார்களாம் இப்போது. ரஜினி படம் வந்தாலும் வசூல் பாக்கி பிரச்சனை.

ரஜினியின் பள்ளிக்கூட விஷயத்திலும் சம்பள பிரச்சனை. என்னாச்சு சார் உங்களுக்கு?

0 comments :

Post a Comment

 
Toggle Footer