Wednesday, December 28, 2016

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகம் அக்கட்சியினரால் தாக்கப்பட்டார்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பா, தமிழக தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மாநில காவல்துறை தலைவர், சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையர், இராயப்பேட்டை காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு இமெயில் மற்றும் பேக்ஸ் மூலம் புகார் அளித்துள்ளார்.

அதில், நானும், எனது கணவரும் அதிமுக அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறோம். மேலும் நான் இராஜ்ய சபா உறுப்பினராக உள்ளேன். என்னுடைய கணவர் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு மனு வாங்க சென்றார். நான் தொலைக்காட்சில் பார்த்தபோது என் கணவர் (லிங்கேஸ்வர திலகர்) கொட்டும் ரத்தத்தில் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். என்னுடைய கணவரை கடைசியாக காவல் துறையினர்தான் அழைத்துச் சென்றனர்.

ஆகவே என்னுடைய கணவருக்கு உடலுக்கும் மற்றும் உயிருக்கும் எந்தவித ஆபத்து வந்தாலும் தமிழக காவல் துறையினர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கணவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer