Tuesday, December 27, 2016

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.

உடல் நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் 1933ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி பிறந்துள்ளார். தனது 83ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

2000 முதல் 2001 வரையும் மீண்டும் 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் இலங்கையின் பிரதமராக பதவிவகித்துள்ளார்.

இலங்கையில் உயிருடன் இருக்கும் மூத்த இரண்டு சிரேஷ்ட அரசியல்வாதிகளாக முன்னாள் பிரதமர்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer