Friday, December 30, 2016

எல்லாம் ஒரு ‘பப்ளிகுட்டி’ ஸ்டண்டுதான் என்று கோடம்பாக்கம் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் நிஜத்தில் புழுங்கிக் கொண்டிருக்கிறார் தமன்னா.

சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி சண்டை’ படம் சம்பந்தமாக பேட்டியளித்த அப்படத்தின் இயக்குனர் சுராஜ், தமன்னாவின் குட்டைப்பாவாடை பற்றி ஒரு கருத்தை சொல்லப் போக, ஏரியாவே  டமால் டுமீல் ஆகிவிட்டது.

“கோடிக்கணக்குல சம்பளம் வாங்குற நடிகை, கொடுக்கிற டிரஸ்சை போட வேண்டியதுதானே?

ரசிகன் இவங்க நடிப்பை பார்க்கவா தியேட்டருக்கு வர்றான்? நடிக்கணும்னு ஆசைப்படுறவங்க அதுக்குன்னு வேற படம் இருக்கு.

அங்க போய் நடிக்கட்டும். என் படத்தில் நடிக்க வந்தா, குட்டை பாவாடை போட்டுதான் ஆகணும்” என்றெல்லாம் திருவாய் மலர்ந்துவிட்டார்.

அப்புறம்? நயன்தாராதான் இந்த பேட்டிக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர்.

“தன் கருத்தை உடனே அவர் வாபஸ் வாங்கணும்” என்று எச்சரிக்கை விடுக்க, சற்று நேரத்திலேயே சரண்டர் ஆனார் சுராஜ்.

“எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது” என்றார்.

ஒருவழியாக இந்த கொதி நிலைக்கு குட்பை சொல்லப்பட்டாலும், சுராஜ் இயக்கும் படத்தில் எந்த நடிகையும் நடிக்கக் கூடாது என்று தீர்மானம் போட்டாலும் ஆச்சர்யமில்லை.

0 comments :

Post a Comment

 
Toggle Footer