Thursday, December 29, 2016

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் சந்தேகம் உள்ளது என்று, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, அவர் இறக்கும் வரையான நாள்வரை முதல்வருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் என்று ஒன்றுமே மக்களுக்குத்  தெரிவிக்கப்படவில்லை.

அதோடு, முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார், உடற்பயிற்சி மேற்கொள்கிறார், வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருகிறார் என்று மருத்துவமனை அறிக்கை விட அவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? இதுக் குறித்து அரசு சார்பில் எந்தவித அறிக்கையும் வெளியிடாதது ஏன்?

முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அவரது ரத்த உறவுகளை அனுமதிக்காதது ஏன்?அவர் கால்கள் துண்டிக்கப்பட்டதாகவும், பிரேதத்தைப் பார்க்கையில் தமக்கு சந்தேகம் உள்ளது என்றும் கூறியுள்ள மனுதாரர், அரசியல் தலைவர்கள் இறந்தால் அவரது இறப்பு எவ்வாறு நேர்ந்தது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நேதாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
என்பதையும் சுட்டிக்காண்பித்து உள்ளார்.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கு சந்தேகம் உள்ளது என்று ஜோசப் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி பார்த்திபன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரரின் அத்தனை சந்தேகநக்லாம் தமக்கும் உள்ளது என்றும், கால்கள் துண்டிக்கப்பட்டது என்கிற சந்தேகத்திலும் தமக்கு உடன்பாடு உள்ளது என்றும், இது தமது சொந்தக் கருத்து என்றும் நீதிபதி வைத்தியநாதன் கூறியுள்ளார்.

முதல்வரின் முறையான சிகிச்சைகள் ஏன் தெரியப்படுத்தவில்லை, முதல்வரின் கன்னத்தில் உள்ள துளைகள் எதனால், நன்றாக இருக்கிறார் என்று அறிக்கை விட்டது ஏன், மத்திய அரசுக்கு இதெல்லாம் தெரிந்தும் மத்திய அரசு சும்மா இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி வைத்தியநாதன், இவ்வழக்கை தாம் விசாரிக்க விரும்பவில்லை என்றும், இதை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வுக்கு மாற்றுவதாகவும் வழக்கை ஒத்தி வைத்தார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer