Tuesday, December 27, 2016

மொட்ட சிவா கெட்ட சிவா' படம் வெளியீடு தொடர்பாக, நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியீடு தொடர்பாக புகார் மனு அளித்தோம். லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படம், ஆரம்பத்தில் வேந்தர் மூவிஸ் மதன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால், சூப்பர் குட்
பிலிம்ஸ் சார்பில் அந்த டைட்டில் மட்டும் வாங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரீலீஸ்க்கு தயாராக இருக்கும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சிலர் இடையூறு செய்து வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளோம்' என்று கூறினார்கள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer