Saturday, December 31, 2016

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் அதிமுக  பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் உருமைபொம்மையை எரித்தனர்.

அறந்தாங்கி அருகே மறமடக்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் மெய்யநாதனின் ஊர். இங்கு அதிமுகவுக்கு அதிக வாக்குகள் பதிவான கிராமம். இந்த கிராமத்தில் மறமடக்கி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடைவீதி பகுதியில் 150க்கும் மேற்பட்டவர்கள்  திரண்டனர். பின்னர் ஜெ. தீபாவிற்கு ஆதரவாக கோசமிட்ட நிலையில் சசிகலாவிற்கு எதிர்ப்பாக கோஷமிட்டனர்.

கூட்டத்தின் நடுவே மையப்பகுதியில் சசிகலாவின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சசிகலாவை பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்கும் நிலையில் அதிமுக தொண்டர்கள் அதிகம் உள்ள மறமடக்கி கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer