Wednesday, December 28, 2016

உள்ளூராட்சி மன்றத்திற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளனர்.

ஆகவே, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை தன்னிடம் ஒப்படைப்பதாயின் கட்சி தலைவர்களை முன்னிலையில் கையளித்தால் சிறப்பாக இருக்கும். எனவே, பாராளுமன்ற வாரத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை என்னிடம் கையளியுங்கள். அப்போது கட்சி தலைவர்களிடம் அறிக்கை குறித்து ஆராய முடியும் என்றும் பிரதமர் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை கையளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எல்லை நிர்ணய ஆணைக்குழு உரிய நேரம் ஒன்றை பெற்றுதருமாறு கோரியிருந்தது. இதற்கு பதில் வழங்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer