Wednesday, December 28, 2016

12 ஆண்டுகள் அதிமுகவிலிருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகினார். செங்கோட்டையன், மற்றும் பொன்னையன் பேச்சு வருத்தமளிக்கிறது என்று சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த போது கூறினார். மேலும் அம்மாவிற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் ஒருவரை உயர்த்தி பேசி அம்மாவை இழிவு படுத்துவது வருத்தமளிக்கிறது என்றும் கூறினார்.

வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பேன் கட்சி ரீதியான பிரச்சாரத்தின்போது அவருக்கு எதிராக பேச நேர்ந்ததற்கு மன்னிப்பும் கேட்பேன் என்றும் ஆனந்தராஜ் கூறினார்.

கட்சி ரீதியாக பேசும்போது, தலைவர்களுக்கு எதிராகப் பேசுவது என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், மூத்த தலைவர் என்கிற விதத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்பேன் என்று மேலும் அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer