Sunday, November 27, 2016

மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதிய வர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நெருங்கி யவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப் படுத்துவீர்கள். கனவு நனவாகும் நாள்.

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப் பீர்கள். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

சிம்மம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் மதிப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி: குடும்பத்தில் சந்தோ ஷம் நிலைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். ஆடை, அணிகலன் சேரும்-. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக் கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாக னத்தை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் பழைய பாக்கி களை போராடி வசூலிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.  எதிர்பாராத உதவி கிடைக் கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக் கப்படுவீர்கள். எதிர்பார்ப் புகள் தடையின்றி முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா பாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார் கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer