வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசாவை பதவி நீக்கி அவருக்குப் பதிலாக வேறொருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஊடக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்துக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் விளக்கம் கோரியுள்ளார்.
இதன்பிரகாரம், விளக்கம் கோரும் கடிமொன்றை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கு, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசாவை பதவி விலக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தவராசாவை பதவி விலக்கி அவருக்கு பதிலாக பிறிதொரு உறுப்பினரான தவநாதனை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு மஹிந்த அமரவீர கடிதம் அனுப்பியதோடு, அதனை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு பிரதியிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த கடிதம் தொடர்பான விளக்கம் போதாமையால் அது குறித்து விளக்குமாறு தாம் ஆளுநருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக நேற்றைய அமர்வில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
எஸ்.தவராசாவை பதவி நீக்கக் கோரும் ஐ.ம.சு.கூ.வின் கடிதம்; அவைத் தலைவர் விளக்கம் கோரல்!
Saturday, November 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment