பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புவர்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர்.
ஒருவருக்கு துர்மரணம் நேர்ந்தாலோ, அல்லது ஒருவர் மரணித்த பின்பு, அவருடைய ஆன்மா, மனித உலகத்தை விட்டு போகாமல், இருந்தாலோ அவர்களை நாம் பேய் என்று அழைப்போம்.
இந்த பேய்களில் பல வகை உண்டு. இப்படி மரணித்த பின்பும் மனித உலகில் வாழும் ஆன்மாக்கள், வஞ்சம் தீர்ப்பதற்காகவும், சிலரை சொந்தமாக்கி கொள்வதற்காகவும், மனிதர்களை பாடாய்படுத்தும். அவ்வாறு அருகில் அமானுஷ்ய சக்திகள் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படும்.
திடீரென காரணமே இல்லாமல் உடல் நடுங்கினலோ அல்லது பதட்டம் ஏற்பட்டாலோ, அங்கு ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யலாம்.
இரவில், அமைதியான இடத்தை கடக்கும் போது, விசித்திரமான சத்தத்தை கேட்டாலோ, அல்லது பெயரை சொல்லி அழைத்தாலோ, சட்டென்று திரும்பி பார்க்க கூடாது. காரணம் அது பேய்கள் நம்முடன் வருவதற்கு நாமே அழைப்பு விடுப்பது போன்று ஆகிவிடும்.
நம்மை சுற்று விசித்திரமான விஷயங்கள் நடந்தால் நமது 6வது அறிவு செயல்படும். நம்மை யாராவது உற்று பார்ப்பது போல் இருந்து, அங்கு யாரும் இல்லை என்று புரிந்தால் அங்கிருந்து உடனே சென்றுவிடவேண்டும்.
இருளில் சிகப்பு நிற உடையிலோ, அல்லது வெள்ளை நிற உடையிலோ யாராவது தென்பட்டால், அது நிச்சயம் அமானுஷ்யம் தான். அதை மோகினி , காட்டேரி என்று சொல்வர். ஆகையால் இளம் ஆண்கள் அவ்வாறு எதையாவது பார்த்தால் அங்கருந்து உடனடியாக சென்றுவிட வேண்டும்.
பெரும்பாலும் நீர்வீழ்ச்சி அருகே மோகினி பிசாசை உணர முடியும் என்று பலர் கூறுகின்றனர். இவைகளை மந்திரவாதிகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமாம்.
மோகினி பிசாசுகள், மற்றும் ரத்த காட்டேரிகள் காற்றில் உலாவுமாம். இவை அருகில் இருப்பதை ஒரு வகை துர்நாற்றத்தால் அறியலாம். இவை வீட்டின் அறையில் நம் அருகிலேயே கூட இருக்குமாம். அப்படி சம்பந்தம் இல்லாமல் வீட்டில் ஏதேனும் கெட்ட நாத்தம் வந்தால் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை அறியலாம்.
Wednesday, November 23, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
Papa tuckeraaa
ReplyDeleteSuper
ReplyDeleteஇதெல்லாம் பொய் பித்தலாட்டம்
ReplyDeletePeta neenga nerla paatha ipdi peaamaateenga
DeleteS so many times i have felt that some one is continiously watching in the same place i don know the reason
ReplyDelete