கடந்த ஆண்டில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம், ஒரு மாபெரும் வெற்றிப்படமாக தனுஷிற்கு அமைந்தது. அதற்கு பின் தனுஷ் நடித்த அனைத்து படங்களும், அந்த படத்திற்கு நிகரான வெற்றி பெறாத நிலையில்... தற்போது அதனுடைய இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த படம் உருவாக உள்ளதாகவும். மேலும் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கமல்ஹாசனின் இரண்டு மகள்களான ஸ்ருதிஹாசனும், அக்சரா ஹாசனும் தனுஷூக்கு ஜோடியாக நடித்துவிட்ட நிலையில், தற்போது கமல்ஹாசனுடன் வாழ்ந்து... சமீபத்தில் பிரிந்த கௌதமியின் மகளும் நடிக்கவிருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படபிடிப்பு வரும் டிசம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும், மேலும் டிசம்பர் முதல் வாரத்தில் தான் இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் குறித்த விரிவான விபரங்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Saturday, November 26, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment