தாயகத்தில் தோன்றிய எழுச்சியில் புதிய வேகம்…
மாவீரர் நாளை இம்முறை தாயகத்தில் கொண்டாட கிடைத்தமை போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாக இருக்கிறது.
தாயகத்தில் இருந்து வெளியாகியிருக்கும் மாவீரர்நாள் நிகழ்வுகளின் புகைப்படங்கள் மறுபடியும் பழைய காலத்தில் தோற்றத்தை காட்டுவனவாக அமைந்துள்ளன.
அதுபோல இந்த ஆண்டு மாவீரர் தினம் புலத்திலும் முன்னைய காலங்களை விட பதிய வீறு பெற்றிருக்கக் காண்கிறோம்.
மக்கள் வருகை வழமையைவிட பத்துவீதமான அதிகரிப்பு சகல நாடுகளிலும் காணப்பட்டது, அதற்குக் காரணம் தாயகத்தில் ஏற்பட்டுவரும் புதிய நம்பிக்கையாகும்.
இலங்கை அரசாங்கம் முன்னைய மகிந்த காலத்தில் இருந்த நெருக்கடிகளை போல நெருக்கடி கொடுக்காது இறந்தோரை அஞ்சலிக்க உள்ள ஜனநாயக உரிமைக்கு சிறிது அனுமதி வழங்கியிருந்ததை இந்தப் புகைப்படங்கள் வழியாகக்காண முடிகிறது.
தமிழகத்திலும் மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கான கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை நிலவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தமிழர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் இதை முக்கிய நிகழ்வாக முன்னெடுத்திருந்ததானது இம்முறை புலத்தில் ஒரு புதிய நம்பிக்கையை மலர்வித்துள்ளது.
அடக்கப்பட்ட உணர்வுகள் பீறிட்டுப்பாயும் பொழுதுகளை தாயகத்தின் மாவீரர்நிகழ்வு அனைத்து இடங்களிலும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி காரணமாக ஒரு சிறிய இடம் தப்பாமல் அனைத்து இடங்களும் புகைப்பட ஆவணங்களாகி முகநூல்களில் நிறைந்து கிடக்கின்றன, இது என்றுமில்லாக் கோலமாக இருக்கிறது.
புலம் பெயர் நாடுகளில் உள்ள அனைத்து ஊடகங்களும் மாவீரர் நாளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இன்றைய நாளை பெருமைப்படுத்தியுள்ளன.
தாயகத்தில் இருப்பது போன்ற பிரமாண்டமான துயிலும் இல்லங்கள் உருவாக்கி இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, சுவிஸ் போன்ற நாடுகளில் பேரெழுச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மாவீரர்தினம் இந்த ஆண்டு பேரெழுச்சி பெற்றுள்ளமைக்கு அடையாளமாக முகநூல்களில் பறந்த சில புகைப்படங்கள்.
Tuesday, November 29, 2016
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment