Thursday, November 24, 2016

சிவகார்த்திகேயனை சுற்றி தேள் கடியும் பூரான் கடியுமாக இருக்கிறது. ஒரே வைத்தியம்... உச்ச பட்ச அதிகாரத்தின் நட்புதான் என்று முடிவெடுத்திருக்கலாம். அவர் ஆளுங்கட்சி வட்டாரத்தின் கதவை தட்டியதாக ஒரு நியூஸ். அவர் போனாரா? யாரை சந்தித்தார்? என்பது குறித்தெல்லாம் அதிகப்படி தகவல்கள் இல்லையென்றாலும், ஒன்று மட்டும் புரிந்தது.

முணுக்கென்று சப்தம் கேட்டால் கூட, ‘முடியாது...’ என்று முறுக்கிக் கொள்ளும் பெப்ஸி அமைப்பு, தயாரிப்பாளர் சங்கம் ரகசிய தடை போட்ட பிறகும் சிவகார்த்திகேயன் படத்தில் பணிபுரிய கிளம்பியதற்கு பின்னால் ஒரு அரசியல் சக்தி இருப்பதாக காதை கடிக்கிறது கோடம்பாக்கம்.

பெப்ஸி தலைவருக்கும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருக்கும் யாரிடமிருந்தோ வந்த போன் உத்தரவை அடுத்துதான் சிவாவுக்கு சாதகமாக முடிந்ததாம் எல்லாம்! குட்ட குட்ட குனிகிற ஆளுக்கு வேண்டுமானால் வலிக்கிற அளவுக்கு கும்மியடிக்கலாம். வெட்ட வெட்ட வளர்கிற மனுஷனை என்ன பண்ணுவீங்க அமைப்புகளே...?

0 comments :

Post a Comment

 
Toggle Footer